
New handa virus spread in china
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பால் உலகெங்கும் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல், பல நாடுகளும் திணறி வருகின்றது. மேலும் உலகமெங்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கொரோனா வைரஸ் பாதிப்பே இன்னும் சரியாக நிலையில் தற்போது பீதியை கிளப்பும் வகையில் சீனாவில் மற்றுமொரு ஹண்டா என்ற புதிய வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பேருந்தில் பயணம் சென்றுகொண்டிருந்தபோது நபர் ஒருவர் திடீரென இறந்தார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஹண்டா வைரஸ் எலியின் சிறுநீர், மலம், எச்சில் போன்றவற்றிலிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது. இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், வயிற்று வலி, உடல் நடுக்கம், சோர்வு, உடல் வலி, வாந்தி, பேதி போன்றவை ஏற்படும். பின்னர் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். பின்னர் இரத்த நாளங்களை பாதிக்கும். இந்த வைரஸ் ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவாது. ஆனால் எலியிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டையும் வீட்டை சுற்றி இருக்கும் பகுதிகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
Advertisement
Advertisement