முதல் இரவு கொண்டாட தங்களது அறைக்கு சென்ற புதுமண தம்பதியினர்! காலையில் உறவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

New couple


New couple

பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்த சவீரா என்ற பெண்ணுக்கும் வாசிம் என்ற நபருக்கு இரு தினங்களுக்கு முன்பு புதிதாக திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அன்று இரவு இருவரும் முதல் இரவு கொண்டாட அறைக்குள் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களது அறையில் குளிர் அதிகமாக இருந்ததால் சூட்டடுப்பில் நிலகரியை கொண்டு தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளனர். அதன் பிறகு அதனை அணைக்காமல் அப்படியே மறந்து தூங்கியுள்ளனர்.

இதனால் அதிகப்படியான வாயு அறை முழுவதும் பரவியுள்ளது. இதனால் புதுமணதம்பதியினர் சுயநினைவை இழந்து மயக்கமாகியுள்ளனர். அதனை அடுத்து அடுத்த நாள் உறவினர்கள் வந்து கதவை தட்டியுள்ளனர்.

New couple

ஆனால் வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. அதனை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் சுயநினைவின்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதில் சவீரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வாசிமும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.