300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஜீப் விபத்து.. திருமண வீட்டார் 8 பேர் பரிதாப பலி.. 5 பேர் படுகாயம்.!

300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஜீப் விபத்து.. திருமண வீட்டார் 8 பேர் பரிதாப பலி.. 5 பேர் படுகாயம்.!


Nepal Pyuthan District Groom Jeep Accident 8 Died 5 Injured

திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்புகையில் ஏற்பட்ட விபத்தில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேபாள நாட்டில் உள்ள மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பியூதான் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஓகாரப்பட்டா, நவுபாகினி கிராமத்தில் இருந்து குவாமுகி கிராமத்திற்கு ஜீப்பில் திருமண வீட்டார் சென்று கொண்டு இருந்தனர். 

இவை மலைப்பாங்கான பகுதி என்பதால் ஜீப்பில் 14 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தறிகெட்டு இயங்கி 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. 

Nepal

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 பேர் சம்பவ இடத்திலேயும், 2 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.