புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
#Breaking: நேபாளத்தில் அதிபயங்கர நிலநடுக்கம்; 128 பேர் பரிதாப பலி.. பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.!
துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு அடுத்த நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.
அதனை உறுதிசெய்யும்பொருட்டு, கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உயிர்சேதங்கள் நடந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள ருக்கும் மேற்கு, ஜாஜர்கோட் பகுதியில் நிலநடுக்கத்தால் கடும் சேதமும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவு 11:32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, வீடுகளில் உறங்கிய பலரும் மரணத்தை சந்தித்துள்ளனர். இதனால் உயிர்சேதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பல இடங்களில் மின்சேவை இல்லாததால், நள்ளிரவில் மீட்பு பணிகள் தாமதமாகின.