#வீடியோ: 3 வயது குழந்தையை கரடி குழிக்குள் தூக்கி வீசிய கொடூற தாய்! பதறவைக்கும் வீடியோ காட்சி...

#வீடியோ: 3 வயது குழந்தையை கரடி குழிக்குள் தூக்கி வீசிய கொடூற தாய்! பதறவைக்கும் வீடியோ காட்சி...


mother-is-3-year-little-child-in-bear-zoo

உஸ்பெகிஸ்தானில் உள்ள உயிரியல் பூங்காவில் 3 வயது மகளை பெற்ற தாயே கரடி குழிக்குள் தூக்கி எறியப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகி  வருகிறது.

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இருக்கும் மிருகக்காட்சிசாலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கரடியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் தனது 3 வயதே ஆன பெண் குழந்தையை கரடி இருக்கும் வேலிக்குள் சுமார் 16 அடி கீழே உள்ள குழியில் வீசியுள்ளார். உடனே குழிக்குள் கீழே விழுந்த குழந்தையை நோக்கி வேகமாக ஓடிய பெரிய கரடி, குழந்தையை மோப்பம் பிடித்துள்ளது.

அதற்குள் அங்கு வேடிக்கை பார்க்கவந்த மக்கள் கத்தி கூச்சலிட, மிருகக்காட்சிசாலைக்காரர்கள் விரைந்து சென்று கரடியை திசை திருப்பி  குழந்தையை காப்பாற்றி தூக்கிச்சென்றனர். மேலும் குழந்தைக்கு கரடியினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனால், கீழே குழந்தை வீசப்பட்டதன் விளைவாக மூளையதிர்ச்சி ஏற்பட்டதாகவும் மற்றும் ஓரிரு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் எந்த  காரணத்திற்காக இவ்வாறு செய்தார் என தெளிவாகத் தெரியவில்லை என்று மிருகக்காட்சிசாலையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.