பச்சக்குழந்தையை வைத்து இந்த கொடூரதாய் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா.! துடிதுடிக்க வைக்கும் ஷாக் வீடியோ இதோ!!

பச்சக்குழந்தையை வைத்து இந்த கொடூரதாய் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா.! துடிதுடிக்க வைக்கும் ஷாக் வீடியோ இதோ!!


mother-charged-for-twirling-baby

அமெரிக்காவில் உள்ள டெனஸி மாகாணத்தில் வசித்து வந்தவர் டைப்ரஷா செஸ்டோன். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் அனைவரின் மனதையும் உறைய வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் செஸ்டோன் புகைபிடித்தபடியே தனது கைக்குழந்தையை பளு தூக்குவது போல ஒற்றை கையால் மேலும் கீழும் தூக்கி விளையாடியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்து செஸ்டோன்க்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் சிலர் இந்த வீடியோவை பகிர்ந்து போலீசாரிடம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்நிலையில் போலீசார்கள் சென்ஸ்டோன் வீட்டிற்கு சென்று அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பொழுது அவர் இந்த குழந்தையே எனக்கு வேண்டாம் என வெறுப்பாக கூறியுள்ளார். இதனால் போலீசார் அந்த குழந்தைக்கு அங்கு பாதுகாப்பு இல்லை, செஸ்டோனால் ஆபத்து வரலாம் என எண்ணிஅந்த குழந்தையை அவரிடமிருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து செஸ்டோன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.