ஹெலிகாப்டரில் கொண்டுவந்து 210 கிலோ எடைகொண்ட கொரில்லாவை சி.டி ஸ்கேன் செய்த மருத்துவர்கள்..! என்ன காரணம் தெரியுமா..?

ஹெலிகாப்டரில் கொண்டுவந்து 210 கிலோ எடைகொண்ட கொரில்லாவை சி.டி ஸ்கேன் செய்த மருத்துவர்கள்..! என்ன காரணம் தெரியுமா..?


moment-medics-send-sleeping-makokou-the-gorilla-into-ct

35 வயதான கொரில்லா ஒன்றினை கால்நடை மருத்துவர்கள் சி.டி ஸ்கேன் மூலம் ஸ்கேன் செய்த சம்பவம் தென்னாப்ரிக்கவில் நடந்துள்ளது.

மாகோகோ என பெயரிடப்பட்டுள்ள ஒரு ஆண் மேற்கு லோலேண்ட் கொரில்லா தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் உயிரியல் பூங்காவில் வசித்துவந்துள்ளது. 35 வயதான இந்த கொரில்லாவின் உடல்நிலை சமீப காலமாக மோசமடைந்து வந்துள்ளது. பூங்காவில் இருக்கும் மருத்துவர்கள் அதற்கு பல்வேறு சிகிச்சைகள் வழங்கியும் எந்த முன்னேற்றமும் இல்லை.

கொரில்லாவின் இந்த மோசமான உடல்நிலைக்கு காரணம் அதன் மூக்கில் வளரும் பாலிப்கள் எனப்படும் சதை வளர்ச்சியே காரணம். கொரிலாவின் மூக்கில் சதை எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்று தெரிந்தால் மட்டுமே அதற்கு சரியான சிகிச்சை வழங்கமுடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

காயத்தை கண்டறிய கட்டாயம் சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இந்நிலையில் கொரில்லாவின் இருப்பிடத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரிட்டோரியாவில் உள்ள ஒண்டர்ஸ்டெபோர்ட் கால்நடை கல்வி மருத்துவமனைக்கு கொரில்லாவை கொண்டு சென்றுள்ளன்னர்.

சுமார் 210 கிலோ கொண்ட இந்த கொரில்லா சுமார் 40 மைல்களுக்கு மேல் பயணித்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு கொரிலாவுக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் உலகளவில் வைரலாகிவருகிறது.