43, 200 தடவை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்! அவர் கூறும் அதிர்ச்சி வாக்குமூலம்!

43, 200 தடவை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்! அவர் கூறும் அதிர்ச்சி வாக்குமூலம்!


Mexico girl abused by men 43200 times

மெக்சிகோவைச் சேர்ந்த கார்லா செசின்டோ என்ற தான் 43, 200 தடவை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் நான் 5 வயதில் தனது தயாரால் நிராகரிக்கபட்டேன். இதன் பின்னர் தனது உறவினரால் 5 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன். ஒரு நாளுக்கு 30 ஆண்கள் வீதம் 4 ஆண்டுகள் தான் 43, 200 முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

12 வயதில் அவர் சிறுவர்களை கடத்தும் கும்பலால் கடத்தப்பட்டுள்ளார். யாரோ ஒருவர் கொடுத்த இனிப்பை சாப்பிட்டதாகவும், சிறிதுநேரம் கழித்து பார்க்கையில் வேறு ஒருவரின் காரில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

mexico
 
தற்போது 23 வயதாகும் கார்லா செசின்டோ மனித கடத்தலுக்கு எதிராக ஒரு வெளிப்படையான ஆதரவாளராக மாறிவிட்டார். அதனால் தான் தனது கதையை பகிரங்கமாக தெரிவிக்கிறார். மனித கடத்தல் ஒரு இலாபகரமான தொழில் என்பதால் மத்திய மெக்சிகோவில் இருந்து அட்லாண்டா மற்றும் நியூயோர்க் வரை பரவி வருகிறது.

டெனான்சினோ நகரில் மனித கடத்தலுக்கு உள்ளாக்கபட்டு இளம் பெண்கள் விபசாரத்தில், தள்ளப்படுவதாகவும் இது போல் இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிர கணக்கான பெண்கள் பாலியல் அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகள், மற்றும், சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் செக்ஸ் பாலியல் சிறைச்சாலைகளுக்கு விற்கபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.