அட இது என்ன புதுசா இருக்கே...! வெள்ளை நிறத்துல மாங்காவா...? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ...

அட இது என்ன புதுசா இருக்கே...! வெள்ளை நிறத்துல மாங்காவா...? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ...



mango-shape-egg-photo-viral

மாங்கா வடிவில் இருக்கும் முட்டை ஒன்றின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி  பலரையும் ஆச்சர்யபட  வைத்துள்ளது. 

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், பிட்டாபுரம் பகுதியை சேர்ந்த சக்தி பாபு என்பவர் குடும்ப வருமானத்திற்காக கடை  ஒன்றை நடத்தி  வருகின்றார். இவர் தனது கடையில் முட்டை விற்பனை  செய்வதற்காக கோழிப்பண்ணையில் இருந்து முட்டைகளை வாங்கி வந்துள்ளார். அப்போது, அதில் ஒரு முட்டை மட்டும் மாங்காய் வடிவில் பெரிய அளவில் இருந்துள்ளது.

இதைக்கண்டு ஆச்சரியம் அடைந்த அவர், உடனே அந்த  முட்டையுடன் பக்கத்தில் ஒரு மாங்காய்  வைத்து புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலான  நிலையில் அச்சு அசலாக மாங்காய் போலவே இந்த முட்டையை பலரும் பார்த்து குழம்பி போயுள்ளனர். வெள்ளை நிறத்தில் இப்படி ஒரு மாங்காயா என கூகுளில் தேட ஆரம்பித்துள்ளனர். ஆனால் அது முட்டை என தெரியவந்ததும் பலரும் ஆச்சரியப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.Mango