"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
"உன்னை பார்த்த பின்பு நான்..." திருட வந்த இடத்தில் திருடு போன இளைஞர்... பிரேசிலில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவம்.!
பிரேசில் நாட்டில் திருட வந்தவர் இதயத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காதலர்கள் அளித்திருக்கும் பேட்டி சினிமாவையே மிஞ்சிவிட்டது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் என்ற பெண் சாலையில் நடந்தது சென்று கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றிருக்கிறார். செல்போனை பறித்து சென்ற இளைஞர் இம்மானுவேலின் அழகில் தனது மனதை பறிகொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இமானுவேலை அணுகிய அந்த இளைஞர் உண்மையைக் கூறி தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இம்மானுவேலுக்கும் அந்த இளைஞர் மீது ஈர்ப்பு ஏற்படவே இருவரும் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த இந்த காதல் ஜோடி கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். விரைவிலேயே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இவர்களது பேட்டி சினிமா காதலையே மிஞ்சும் வகையில் இருந்திருக்கிறது.