இறந்துபோனவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடு செய்த குடும்பம்.. இறந்தவர் உணவு சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக வந்த அதிர்ச்சி தகவல்

இறந்துபோனவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடு செய்த குடும்பம்.. இறந்தவர் உணவு சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக வந்த அதிர்ச்சி தகவல்


Man was eating at hospital who was dead informed by hospital

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் இறந்துவிட்டதாக தகவல் வந்தநிலையில் அவர் மருத்துவமனையில் உயிருடன் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த சம்பவம் நடந்துள்ளது.

இத்தாலியின் ரோம் நகரை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனை ஊழியர்கள் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளன்னர். இதனை கேட்டு அதிர்ச்சியும், சோகமும் அடைந்த அவரின் குடும்பத்தினர் இறந்தவருக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்நிலையில் இறுதிச்சடங்கின்போது இறந்தவரின் புகைப்படத்தை மருத்துவமனை ஊழியர்கள் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் புகைப்படத்தில் இருந்தவர் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை.

இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் தவறுதலாக வேறொரு நபரின் இறந்த செய்தியை இவர்களுக்கு தெரிவித்தது தெரியவந்துள்ளது. அதேநேரம் இறந்ததாக தெரிவிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கேட்ட அவரது குடும்பத்தினர் சற்று ஆறுதலும், நிம்மதியும் அடைந்துள்ளனர்.