மக்களே கவனம்.. தும்மலை அடக்கியதால் சுவாசக் குழாயில் விரிசல்: மருத்துவர்கள் எச்சரிக்கை.!

மக்களே கவனம்.. தும்மலை அடக்கியதால் சுவாசக் குழாயில் விரிசல்: மருத்துவர்கள் எச்சரிக்கை.!



Man tears windpipe from holding sneeze in europe

ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தன்று தனது காரில் பயணம் செய்துள்ளார். அப்போது விவசாய நிலங்கள் வழியே பயணித்ததாக கூறப்படும் நிலையில், வைக்கோல் ஒன்று அவரது மூக்கின் வழியே சென்று தும்மலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

தும்மலை அடக்குவதற்கு வாய் மற்றும் மூக்கை மூடி இருக்கிறார். இதனால் அவரது சுவாசக் குழாயில் காற்று நிரம்பி அது அவரது கழுத்து பகுதியில் சிறிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் கழுத்து பகுதி வீக்கமடையவே, பதறியவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று அனுமதியாகியுள்ளார். 

World news

அங்கு விபரத்தை கேட்ட மருத்துவர்கள் அவருக்கு CT ஸ்கேன் செய்து பார்த்தபோது, தும்மலால் அவரது சுவாசப்பாதையில் ஏற்பட்ட சிறிய அளவிலான விரிசல் ஒன்று தெரியவந்துள்ளது. இதனால் காற்று அவரது உடலில் சென்று ஆங்காங்கே சிக்கிக்கொள்ள அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையளித்த மருத்துவர்கள், 2 நாட்கள் சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இரண்டு வாரங்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். பொதுவாக தும்மல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் இயல்பானது. அவை வரும்போது நாம் தும்மிவிட வேண்டும். அதிக கவனத்துடன் செயல்படுகிறோம் என்ற பெயரில் தும்மலை அடக்க முயற்சிப்பது இவ்வாறான விஷயங்களுக்கு வழிவகை செய்யும்.