வைரல் வீடியோ: முதலையிடம் சண்டையிட்டு அதன் வாயில் இருந்து நாய்க்குட்டியை காப்பாற்றிய உரிமையாளர்.. வீடியோ பாருங்கMan saved dog from alligator viral video

நபர் ஒருவர் முதலையின் வாயில் இருந்து நாய் குட்டி ஒன்றை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட். 74 வயதாகும் இவர் தனது வீட்டில் நாய்க்குட்டி ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார். எப்போதும் தனது நாய் குட்டியுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் ரிச்சர்ட் வழக்கம்போல் சமபவத்தன்றும் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

அவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடத்திற்கு அருகே ஒரு பெரிய குளம் ஒன்றும், அந்த குளத்தில் ஏராளமான முதலைகளும் உள்ளது. ரிச்சர்டும், அவரது நாய் குட்டியும் அந்த குளத்தின் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது குளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த குட்டி முதலை ஒன்றை ரிச்சர்டின் செல்ல நாய் குட்டியை கவ்விக்கொண்டு நீருக்குள் பாய்ந்தது.

viral video

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரிச்சர்ட் உடனே நீருக்குள் பாய்ந்து, அந்த குட்டி முதலையை லாவகமாக பிடித்து, அதன் வாயில் இருந்து தனது நாய் குட்டியை மீட்டெடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. முதலை சிறியதாக இருந்ததால் நாய் குட்டியும், ரிச்சர்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

எனினும் ரிச்சர்டின் இந்த துணிச்சலான செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். அந்த காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி இணையத்தில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.