உலகம் லைப் ஸ்டைல் காதல் – உறவுகள்

ஒரே நேரத்தில் இரண்டு அழகான இளம் பெண்களை திருமணம் செய்துகொண்ட இளைஞர்! அவர் சொன்ன காரணம்?

Summary:

Man married two girls at same time in Indonesia

இந்தோனேசியாவில் இரண்டு அழகான பெண்களை இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டதற்கான காரணத்தை அந்த இளைஞரிடம் கேட்டபோது அவர் கூறிய காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதாவது அந்த இரண்டு பெண்களும் குறிப்பிட்ட இளைஞரை தீவிரமாக காதலித்துள்ளனர்.

 

வரதட்சணைக்காகவோ அல்லது வேறு விஷயத்திற்காகவோ தான் அந்த இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் தனது காதலிகள் மீது கொண்ட அதீத அன்பினால் மற்றும் அக்கறையாலும் அவர்களை திருமணம் செய்துகொண்டதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். 

மேலும் ஒருவரை திருமணம் செய்து மற்றொருவரை திருமணம் செய்யாமல் இருந்தால் அவர் மிகவும் வருத்தப்படுவார் என்பதற்காகவே இருவரையும் மணந்து கொண்டதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இந்த திருமணம் இந்தோனேஷியாவில் உள்ள களிமண்டன் எனும் கிராமத்தில் எளிமையாக நடந்து முடிந்தது.


Advertisement