உலகம் லைப் ஸ்டைல் Covid-19

தனிமை வார்டில் இருந்து தப்பித்து காதலி வீட்டின் கப்போர்டில் ஒழிந்த இளைஞர்..! அதன் பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Summary:

Man jailed for 6 months who escaped from corona isolation ward

கொரோனா அறிகுறிகளுடன் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இளைஞர் ஒருவர் ஹோட்டல் அறையில் இருந்து தப்பித்து சென்று காதலி வீட்டில் தலைமறைவான நிலையில் அவரை கைது செய்த போலீசார் தற்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர். 

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் ஒருவிதமாக, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த யூசுப் என்ற இளைஞர் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் இருந்ததால் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞர் ஹோட்டல் அறை தனிமைப்படுத்தப்பட்டிருந்தநிலையில் அவர் ஹோட்டல் அறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். 

இதற்காக ஹோட்டல் அறையின் அருகில் இருந்த ஏணி ஒன்றை பயன்படுத்தி அங்கிருந்து அந்த இளைஞர் தப்பி செல்ல முயன்றுள்ளார். இதனை அறிந்துகொண்ட அந்த ஹோட்டல் நிர்வாகம் அந்த ஏணியை அங்கிருந்து அப்புறப்படுத்தி நிலையில் சில நாட்கள் அந்த இளைஞர் ஹோட்டல் அறையில் அமைதியாக இருந்துள்ளார். 

இந்நிலையில் மீண்டும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்த அந்த இளைஞர் இந்த முறை ஹோட்டல் அறையில் இருந்து தப்பித்து தனது காதலி வீட்டுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளார். ஓட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இளைஞர் தப்பி சென்றதை ஹோட்டல் நிர்வாகம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து போலீஸார் அந்த இளைஞரை தேடி அவரது காதலி வீட்டிற்கு சென்றுள்ளனர். 

போலீசார் வருவதை உணர்ந்த அந்த இளைஞன் தனது காதலி வீட்டில் இருந்த மிகப்பெரிய கபோடு ஒன்றுக்குள் சென்று மறைந்துள்ளார். ஒரு வழியாக அவரை தேடி கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். 

இதனை அடுத்து நடந்த நீதிமன்ற விசாரணையில் அந்த இளைஞன் தனது காதலிக்கு பிறந்தநாள் எனவும், அதனால் அவருக்கு வாழ்த்து சொல்லவே தனது காதலி வீட்டிற்கு சென்றதாகவும் கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் அந்த இளைஞருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.

அமைதியாக இருந்திருந்தால் 14 நாட்கள் உடன் தனிமைப்படுத்துதல் முடிந்து அந்த இளைஞர் வீட்டிற்கு சென்று இருக்கலாம் ஆனால் தற்போது ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement