இதுவல்லவோ காதல்.! 3.5 வருடங்கள் முடிவெட்டாமல் இருந்து காதலிக்காக விக் பரிசளித்த காதலன்.! நெகிழ்ச்சி சம்பவம்.!

இதுவல்லவோ காதல்.! 3.5 வருடங்கள் முடிவெட்டாமல் இருந்து காதலிக்காக விக் பரிசளித்த காதலன்.! நெகிழ்ச்சி சம்பவம்.!



man-grows-hair-for-35-years-to-gift-wig-for-her-girl-fr

காதலுக்காக எத்தனையோ தியாகங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அமெரிக்காவைச் சார்ந்த ஒரு நபர் 3.5 வருடங்கள் முடி வளர்த்து அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விக்கை அலோபீசியா நோயினால் பாதிக்கப்பட்ட தனது காதலிக்கு பரிசளித்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள வாட்டர்ஃபோர்டைச் சேர்ந்தவர் கோடி என்னிஸ். இவரது காதலி ஹன்னா ஹோஸ்கிங். சில வருடங்களுக்கு முன்பு ஹன்னா ஹோஸ்கிங் அலோபீசியா நோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய கூந்தலை முழுவதுமாக இழந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் வருடம் மே மாதம் தனது காதலனான கோடி என்னிசிடம் தனக்கு 30 இன்ச் நீளமுடைய ஹேர் விக் வேண்டும் என விளையாட்டாக கேட்டுள்ளார்.

worldதனது காதலிக்காக இதனை சவாலாக எடுத்துக்கொண்ட கோடி என்னிஸ் கிட்டத்தட்ட 3.5 வருடங்கள் முடி வெட்டாமல் இருந்து நீண்ட தலை முடியை வளர்த்து அதிலிருந்து தயாரிக்கப்பட்ட விக்கை கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி தனது காதலிக்கு பரிசளித்திருக்கிறார். இந்த விக் தன்னுடைய கைகளில் கிடைத்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக ஹன்னா தெரிவித்துள்ளார். தற்போது தயாரிக்கப்பட்ட விக் தன்னுடைய பழைய கூந்தலைப் போன்றே இருக்கிறது என ஹன்னா தெரிவித்துள்ளார்.

worldமேலும் இந்த விக் தன்னுடைய கைகளில் கிடைத்த போது உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்ததாகவும் உருக்கமுடன் தெரிவித்து இருக்கிறார் ஹன்னா. தனது காதலிக்காக 3.5 வருடங்கள் முடி வெட்டாமல் இருந்த கோடி என்னிஸ் தனது முடியை மிகுந்த அக்கறையுடன் பராமரித்து வந்ததாக தெரிவித்திருக்கிறார். தனது முடியின் நீளம் 29 இன்ச் வளர்ந்ததும் அதனை வெட்டி  விக் தயார் செய்யும் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.