குடையோடு சேர்ந்து காற்றில் பறந்த மனிதர்! வைரலாகும் விநோத வீடியோ
துருக்கியில் நேற்று அடித்த பயங்கர காற்றில் ஒரு பெரிய குடையுடன் சேர்ந்து மனிதர் ஒருவரும் காற்றில் பறக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
துருக்கியில் உள்ள ஓஸ்மானியா கடைப் பகுதியில், சாலை ஓரத்தில் நிழலுக்காக கடைகாரர் ஒருவர் பெரிய தற்காலிக குடை ஒன்றை விறித்து வைத்துள்ளார். நேற்று அந்த பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது.
அந்த காற்றில் கடையில் விறித்து வைத்திருந்த குடையானது நகரத் தொடங்கியது. பின்னர் சில வினாடிகளிலே குடை மேல் நோக்கி எழும்ப துவங்கியது. இதனைக் கண்ட அருகிலிருந்த 3 பேர் குடை மீதேறி தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களையும் சேர்த்து இழுத்துக்கொண்டு குடை மேலே பறக்க துவங்கியது.
உடனே இரண்டு பேர் கீழே இறங்கிவிட, ஒருவர் மட்டும் குடையோடு சேர்ந்து காற்றில் பறந்துள்ளார். இந்த காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
BLOWN AWAY: Surveillance footage captures moment strong winds lift man into the air as he tries to stop a patio umbrella from falling over in gusty conditions. https://t.co/zaR5d70Mqa pic.twitter.com/T3jGnXZfWe
— ABC News (@ABC) March 28, 2019