உலகம்

விமானத்தின் கழிவறைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! அதிரவைக்கும் தகவல்கள்!

Summary:

Man arrested for fixing hidden camera in flight

யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஓன்று 646 பயணிகளுடன் San Diego-விலிருந்து Houston பகுதிக்கு புறப்பட்டுள்ளது. அப்போது விமானத்தின் முதல் வகுப்பில் இருந்த பெண் பயணி ஒருவர் விமானத்தின் கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் விமானத்தின் கழிவறையில் நீல நிற வண்ணத்தில் வெளிச்சம் வந்ததை பார்த்து சந்தேகம் அடைந்துள்ளார்.

மேலும் இதுகுறித்து விமானத்தில் இருந்த அதிகாரிகளிடம் அவர் புகார் அளிக்க, கழிவறையில் சென்ற பார்த்த போது அங்கு ரகசிய கேமிரா வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், இதுகுறித்து அவர்கள் விசாரித்ததில் அதே விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்த ஒரு நபர் மீது சந்தேகம் எழுந்ததாகவும், அந்த நபரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த நபர் யார் என்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த குற்றத்திற்காக அவருக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை கிடைக்கும் எனவும், முழு விசாரணைக்கு பிறகே அந்த நபர் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement