விஷத்தன்மையுள்ள மீனை சமைத்து சாப்பிட்ட பெண் மரணம்; மக்களே விழிப்புடன் இருங்கள்..!
கணவன் - மனைவியாக ஆசையுடன் மீன் வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாம் விரும்பி சாப்பிடும் இறைச்சி வகை உணவுகளில் ஒன்றான மீனில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவற்றில் பல வகைகளும் இருக்கின்றன. இதில் Puffer Fish என்று அழைக்கப்படும் மீன் விஷத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. அதனால் அதை சமைத்து சாப்பிடுவது நல்லதல்ல.
இந்த நிலையில், மலேஷிய நாட்டினை சேர்ந்த பெண்மணி Lim Siew Guan (வயது 83). இவரின் கணவர் கடந்த மார்ச் 25ம் தேதி கடைக்கு சென்று மீன் வாங்கி வந்து இருக்கிறார். இதனை தம்பதிகள் இருவரும் சமைத்து சாப்பிட்டு இருக்கின்றனர்.
மீனை சாப்பிட்ட சில மணிநேரத்திலேயே பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் கணவரும் மனைவி அனுமதியான சிலமணிநேரம் பின்பு அதே மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதியாகியுள்ளார்.
விசாரணையில், இவர்கள் இருவரும் விஷத்தன்மை கொண்ட Puffer Fish ஐ சாப்பிட்டது உறுதியானது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துவிட, அவரின் கணவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.