பெயில் தர மறுப்பு தெரிவித்த நீதிபதியை பாய்ந்து அடித்த குற்றவாளி; நீதிமன்றத்தில் துணிகரம்.!Los Angels District Court Judge Mary Kay Beaten by Accuse Delone Redden While Denied Bail 

 

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் மேரி கே ஹோல்த்ஸ் (Mary Kay Holthus).

இன்று நீதிபதி மேரி கே அமர்வில், குற்றவழக்கு தொடர்பான விசாரணை நடந்தது. அப்போது, குற்றவாளி டெலோன் ரெடெனுக்கு நீதிபதி ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி, நீதிபதியை திடீரென பாய்ந்து அடித்தார். உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள், நீதிபதியை குற்றவாளியின் பிடியில் இருந்து மீட்டனர்.  

தொடர்ந்து குற்றவாளிக்கு ஜாமின் மறுக்கப்பட்டு, அவரை கூடுதலாக நீதிபதியை தாக்கிய வழக்கிலும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.