நல்லா இருந்த உதட்டை நாசமாக்கிய பெண்மணி.. பேரழகி எண்ணத்தில் விழுந்த பேரிடி..!London girl Loss Lip Beauty

உதட்டை அழகாக்க நினைத்த பெண்ணின் செயலால் ஏற்பட்ட விபரீதம், அவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

பெண்கள் தங்களின் அழகை அதிகரிக்க முயற்சித்து வரும் வேலையில், சிலர் இன்றைய தொழில்நுட்பங்களை உபயோகம் செய்து அதனை மெருகேற்ற செயலாற்றி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள செஸ்டர் நகரை சேர்ந்த பெண்மணி லாரன். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், இவருக்கு உதடு பெரிதாக, அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார். ஆனால், அவரின் உடல்நிலை எதிர்வினையால் உதடுகள் வீங்கியுள்ளன. மேலும், உதட்டில் செலுத்தப்பட்ட ஊசியால் அவை வேண்டும் என்றும், தொடக்கத்தில் வலி இருக்கும் என்றும் கூர்பாடுகிறது.

இந்த ஊசி சிலருக்கு ஒத்துக்கொள்ளும் என்றாலும், அலர்ஜி ஏற்பட்டுவிட்டால் பிரச்சனை தான். அப்படி அலர்ஜியை சந்தித்த பெண்ணின் உதடுகள் வீங்கியுள்ள நிலையில், அவரால் பேச கூட இயலவில்லை. சுவாச பகுதிகள் நெருக்கமாகி சிரமமும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.