என்னையா நடக்குது... 66 லட்ச ரூபாய் கொடுத்து சிறுவர்களை ஆபாச படம் எடுத்த லண்டன் ஆசிரியர் கைது.!

என்னையா நடக்குது... 66 லட்ச ரூபாய் கொடுத்து சிறுவர்களை ஆபாச படம் எடுத்த லண்டன் ஆசிரியர் கைது.!


londn-teacher-sentenced-for-taking-obscene-videos-of-ki

சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச படம் எடுத்து அனுப்ப பணம் கொடுத்த லண்டன் ஆசிரியருக்கு  பன்னிரெண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.

லண்டனைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியரான மேத்யூ ஸ்மித் இந்தியாவில் இருக்கும் 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி அவர்களின் ஆபாச படங்களை தனக்கு அனுப்பியவர்களுக்கு பணம் கொடுத்து வந்திருக்கிறார். மேலும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் இவர் ஊக்குவித்துள்ளார்.

worldஇதற்காகவே டெலிகிராம் செயலியில் ஒரு குரூப் ஆரம்பித்து செயல்பட்டுள்ளார். தனக்கு ஆபாச படங்களை அனுப்பிய இரண்டு இந்திய இளைஞர்களுக்கு இதுவரை 66,000 பவுண்டு பணம் கொடுத்திருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. இதன் இந்திய மதிப்பு 69 லட்ச ரூபாயாகும். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவில்  தங்கி இருந்த இவர் சிறார்களுக்கு உதவும்  தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

worldபின்னர் நேபாளம் சென்று மூன்று ஆண்டுகள் தங்கி இருந்த அவர் 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் லண்டன் திரும்பி இருக்கிறார். இவரை நவம்பர் மாதம் லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது சுமத்தப்பட்ட 22 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டது. இதனால் இவருக்கு தண்டனையாக 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.