8 மாத காதல்.. ஆடம்பரமாக நடந்த திருமணம்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்.. உண்மை தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..Kazakhstan man married doll viral video

கஜகஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் பொம்மை ஒன்றை திருமணம் செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக காதலுக்கு கண் இல்லை, ஜாதி - மதம் இல்லை என கூறுவது வழக்கம். பல நேரங்களில் அது உண்மையாக இருந்தாலும், இந்த சம்பவம் எல்லாவற்றையும்விட மிகவும் வித்தியாசமான ஒன்று. ஆம். கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பாடி பில்டர் யூரி டோலோச்ச்கோ என்பவர் தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்திவந்த பொம்மை ஒன்றை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

அந்த பொம்மையுடன் யூரி டோலோச்ச்கோ 8 மாதங்கள் டேட்டிங் செய்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அந்த பொம்மையிடம் தனது காதலை கூறியுள்ளார். தற்போது அந்த பொம்மையை திருமணமும் செய்துள்ளார் யூரி டோலோச்ச்கோ.

யூரி டோலோச்ச்கோ தனது பாலியல் பொம்மையை மிகவும் நேசிப்பதால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், யூரி டோலோச்ச்கோ தனது நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் தனது பாலியல் பொம்மையுடன் மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்துகொண்ட வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.