அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் போட்டி!kamala harrish VicePresident election in america

அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியும் நடந்து வந்தது.

குடியரசுக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு தற்போதைய துணை அதிபர் மைக் பென்சும் போட்டியிடுகின்றார். ஜனநாயகக் கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கலிஃபோர்னியாவைச் சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் நாட்டின் துணை அதிபராகும் முதல் பெண் என்ற பெருமையையும், துணை அதிபராகும் முதல் இந்திய-அமெரிக்க-ஆஃப்ரிக்க பெண்ணாகவும் அவர் இருப்பார். கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர் ஆவார்.