ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர் - ஜம்முவில் பாதுகாப்புப்படை அதிரடி.!

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர் - ஜம்முவில் பாதுகாப்புப்படை அதிரடி.!


jammu-kashmir-pulwama-chandgam-3-terrorist-encountered

சந்த்கம் பகுதியில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம், சந்த்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகளின் வரவை புரிந்துகொண்ட பயங்கரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

jammu kashmir

இருதரப்பும் இடையே துப்பாக்கி சூடு நடந்த நிலையில், மொத்தமாக 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். 

இந்த 3 பயங்கரவாதிகளால் ஒருவன் பாகிஸ்தானி என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இவர்கள் மூவரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சார்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.