10 நொடி கூட முழுமையடையாத நிகழ்வை பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது; நீதிபதியின் சர்ச்சை தீர்ப்பால் பேரதிர்ச்சி.!

10 நொடி கூட முழுமையடையாத நிகழ்வை பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது; நீதிபதியின் சர்ச்சை தீர்ப்பால் பேரதிர்ச்சி.!



italy-rome-sexual-molestation-case

 

இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில், கடந்த ஆண்டு 17 வயதுடைய சிறுமி பள்ளியில் காப்பாளராக பணியாற்றி வந்தவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். 

சிறுமி படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்த நேரத்தில், காப்பாளர் சிறுமியின் பிணைப்பகுதியில் இருந்து பேண்டை & உள்ளாடையை இழுத்து, பின்பகுதியை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். 

இவ்வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், காப்பாளருக்கு 3 ஆண்டுகள் தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டார். 

world

ஆனால், குற்றவாளியா தான் 10 நொடிகள் கூட அதனை செய்யவில்லை. விளையாட்டுத்தனமாக செய்தேன் என தெரிவித்துள்ளார். 

இருதரப்பு வாதங்ள் ஏற்றுக்கொண்ட நீதிபதி குற்றவாளியை விடுதலை செய்து உலக அரங்கையே அதிரவைத்தார். மேலும், 10 நொடிகள் கூட சம்பவம் நிகழவில்லை என்பதால், அதனை பாலியல் தொல்லையாக கருத இயலாது எனவும் தெரிவித்து இருக்கிறார். 

இந்த தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், பலரும் தங்களின் அந்தரங்க பகுதிகளை 10 நொடிகள் தொட்டவாறு 10 Seconds & Bried Groping என்ற ஹாஷ்டேக்குகளில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.