
Italy government post video about coronovirus spreading
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இத்தகைய கொடிய வைரஸால் உலகம் முழுவதும் 160000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவை அடுத்து இத்தாலியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் இத்தாலியில் மட்டுமே இதுவரை 630க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பல நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் எப்படி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிமையாக பரவுகிறது என்பதை விளக்கும் வகையில் இத்தாலி அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்மூலம் ஒவ்வொருவரும் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
See HOW Coronavirus, COVID-19 Infection are Easily Spread... Pls Take Precaution accordingly....!! pic.twitter.com/m7pAlTSzx6
— Ardhendu Biswas (@Ardhend39808047) March 15, 2020
Advertisement
Advertisement