400 க்கும் மேற்பட்ட பெண்கள்.. அந்தரங்க பாகத்தை காண்பிக்கச்சொல்லி., போலி மகப்பேறு மருத்துவர் பகீர் செயல்.!

400 க்கும் மேற்பட்ட பெண்கள்.. அந்தரங்க பாகத்தை காண்பிக்கச்சொல்லி., போலி மகப்பேறு மருத்துவர் பகீர் செயல்.!


Italy Fake tricks 400 women undergoing vaginal exams Through Web Cam

போலி மகப்பேறு மருத்துவர் வெப் கேமரா மூலமாக 400 பெண்களின் யோனியை பரிசோதனை செய்தவ பாலியல் ரீதியான தொல்லையை கொடுத்துள்ளார். 

இத்தாலி நாட்டில் உள்ள பாரி நகரை சார்ந்த நபர், தன்னை மகப்பேறு மருத்துவர் என்று கூறி பெண்களிடம் அறிமுகம் செய்துள்ளார். பின்னர், பெண்களின் அந்தரங்க உறுப்புகள் சுத்தம் தொடர்பாக பேசி, உங்களது அந்தரங்க உறுப்பு சுத்தமாக எந்த நோய்தொற்றும் இல்லாமல் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், வீடியோ காலில் அந்தரங்க உறுப்புகளை காண்பித்தாலே, அதனை பார்த்து மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய 400 க்கும் மேற்பட்ட பெண்கள், வீடியோ காலில் தோன்றி தங்களின் அந்தரங்க உறுப்புகளை காண்பித்து இருக்கின்றனர். மேலும், அந்தரங்க உறுப்புகளை பெண்கள் காண்பிப்பதற்கு முன்னதாக அவர்களின் தாம்பத்திய விஷயம் குறித்து கேட்டறிந்து கிளுகிளுப்பை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. 

italy

இறுதியாக, சமீபத்தில் போலி மருத்துவர் பெண்ணிடம் இதனைப்போல அத்துமீற முயற்சிக்கையில், சுதாரித்த பெண்மணி தனது அந்தரங்க உறுப்புகளை காண்பிக்க மறுப்பு தெரிவித்து வீடியோ கால் அழைப்பை துண்டித்துள்ளார். பின்னர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணையில் போலி மகப்பேறு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின்னரே அவர் போலி மருத்துவர் என்பதும் உறுதியாகியுள்ளது. 

போலி மருத்துவரின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் மொபைல், கேமரா, மெமரி கார்டுகள் போன்றவற்றை கைப்பற்றி இருக்கின்றனர்.