உலகம் Covid-19

கொத்துக்கொத்தாக பலியான இத்தாலியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது எப்போது? கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Summary:

Italians schools will reopen on September

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு கொத்துக்கொத்தாக உயிர்கள் பலியாகின.

இத்தாலியில் இதுவரை 2.21 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதனால் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் அந்நாட்டில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பள்ளிகளும் அப்போதே மூடப்பட்டன.

கொரோனாவின் உச்சத்தை சந்தித்த இத்தாலியில் தற்போது படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் பள்ளிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் தான் திறக்கப்படும் என அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் லூசியா அசோலினா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது ஆபத்தானது எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அந்நாட்டில் பள்ளிகள் அனைத்தும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் மூடப்படுகின்றன. 


Advertisement