உச்சகட்டத்தை நோக்கி நகரும் இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர்: ரஷ்யாவின் ஆதரவு யாருக்கு?.. ட்விஸ்ட் வைத்த புதின்..!Israel Palestine War Russia Take Mediator Place 

 

இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக, தற்போது வரை இருதரப்பிலும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கின்றனர். பாலஸ்தீனிய நாடு கேட்டு ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் - இஸ்ரேலிய அரசுக்கும் இடையே நடைபெறும் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக இராணுவ தளவாடங்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில், "இஸ்ரேல் - பாலஸ்தீனிய பிரச்சனையை பேசி தீர்த்து அமைதியான முறையில் தீர்வுகள் காணப்பட வேண்டும். அங்கு நடக்கும் தாக்குதல்கள், அதனால் ஏற்படும் இறப்புகள் வருத்தத்தை தருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளை பற்றி அமெரிக்காவுக்கு கவலை இல்லை. அமெரிக்காவின் கொள்கை தன்னலனை மட்டுமே காண்பிக்கிறது. பிராந்திய நலனை அது பார்க்கவில்லை. இதனாலேயே அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது. 

அரசியல் பிரச்சனையை அரசியல் ரீதியாக அணுகி தீர்வு காண வேண்டும். பாலஸ்தீனிய நாடு உருவாவதே இப்பிரச்னைக்கு சரியான தீர்வாக இருக்கும். அதற்கான அமைதி முயற்சியை இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டும். 

காசா நகரில் தரைவழி தாக்குதல் நடந்தால், அங்கு பேரழிவு ஏற்படும். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தாக்குதல் நடத்தியது சரி எனினும், பிரச்சனையை பேசி முடிக்க முயற்சிக்க வேண்டும்" என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். 

ரஷியா இஸ்ரேல் - பாலஸ்தீனிய விவகாரத்தில் நடுநிலையோடு தன்மையை அணுகி இருக்கிறது. ரஷியா - உக்ரைன் விவகாரத்தில் இஸ்ரேல் நடுநிலைத்தனமையோடு இருந்தது. அதன் விளைவாகவும், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு - ரஷிய அதிபரின் நட்பு காரணமாகவும் இந்நடுநிலைத்தன்மை இடத்தினை ரஷியா மேற்கொண்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இன்று இஸ்ரேல் அரசு படைகள் காசா எல்லையை நோக்கி தனது இராணுவ பீரங்கிகளை நகர்த்தி தயார் நிலையில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.