அனுதினமும் தொடரும் இஸ்ரேலின் வான்வழித்தாக்குதல்: முகாமில் விழுந்த குண்டு., 70 பேர் பரிதாப பலி.!

அனுதினமும் தொடரும் இஸ்ரேலின் வான்வழித்தாக்குதல்: முகாமில் விழுந்த குண்டு., 70 பேர் பரிதாப பலி.!



israel-palestine-conflict-70-more-died-airstrike-today


இஸ்ரேல் - பாலஸ்தீனியம் இடையே கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய போர் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் மட்டும் பிணைக்கைதிகளை பரிமாறுவதற்காக போர் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. 

தற்போது வரை பாலஸ்தீனத்தின் சார்பில் 20,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் பாலஸ்தீனிய மக்களுக்கு மருத்துவம் உட்பட அத்தியாவசிய பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் வழங்கி வருகிறது. 

மக்களை காப்பாற்ற முகாம்களும் அந்நாட்டு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அல் மகஜி பகுதியில் உள்ள முகாமில் 70 பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 20,000-த்தை நெருங்கி இருக்கிறது.