உணவுக்காக காத்திருந்த 5 பொதுமக்கள் பரிதாப பலி; அத்தியாவசிய பொருட்கள் தலைமீது விழுந்து துயரம்.!Israel Gaza War Relief Materials Parachute Failure 5 Gaza Citizens Died 

 

இஸ்ரேல் - காசா இடையே கடந்த அக்.07, 2023 முதல் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் பலியாகினர். காஸாவின் ஆதரவு பெற்ற பாலஸ்தீனிய குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி வழங்கத்தொடங்கிய இஸ்ரேல், காசா மீது படையெடுத்து சென்றது. இந்த தாக்குதலில் தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 

தொடர்ந்து ஹமாஸ் அமைப்பை சேர்ந்த பல பயங்கரவாதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதனால் இருதரப்பிலும் கடும் சண்டை நடந்து வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக மத்திய கிழக்கு நாடுகளும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போருக்கான ஆயுதங்கள் வழங்கி வருகிறது. 

தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு உதவி செய்ய உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையிலான பொருட்களை வழங்கி வருகிறது. எகிப்தில் உள்ள விமான நிலையத்தின் வாயிலாக, அமெரிக்கா தனது நிவாரண பொருட்களை காஸாவின் மீது வானில் இருந்தவாறு வீசி வருகிறது.  

இந்நிலையில், அமெரிக்க விமானப்படை வீசிய நிவாரண பொருட்கள், பேரசூட் செயலிழப்பு காரணமாக நேரடியாக அகதிகள் முகாமில் விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்குள்ள சதி அகதிகள் முகாமில் உணவுக்காக காத்திருந்த நபர்கள் உயிரிழந்தனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.