என்னது பொது இடங்களில் நடனம் ஆடினால் சிறை தண்டனையா..? என்னடா இது கொடுமையா இருக்கு..!

என்னது பொது இடங்களில் நடனம் ஆடினால் சிறை தண்டனையா..? என்னடா இது கொடுமையா இருக்கு..!


Is dancing in my public places punishable by jail time..? This is terrible..!

ஈரானில் முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 ஈரானில் பொது இடங்களில் நடனம் ஆடுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்த நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு ஒரு இளம் ஜோடியினர் நடனமாடியுள்ளனர். மேலும் அவர்கள் தெஹ்ரானின் நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு அந்நாட்டு அரசு விதித்த விதிகளை மீறி நடனமாடியுள்ளனர். மேலும் அவற்றை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அந்த இளம் ஜோடிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.