இந்தியா உலகம்

ஈரான்-அமெரிக்கா போர் பதற்றத்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் பேராபத்து!

Summary:

iran and America issue


ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய  வான்வழி தாக்குதலில், ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட  ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது 

இரண்டு நாடுகளுக்குமிடையே அமைதி இல்லை என்றால், இந்தியாவிற்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. உலகில் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈரான் தொடர்ந்து முதல் 3 இடங்களில் உள்ளது, தற்போது அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.

இதனால் தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் போது சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து, இந்தியாவில் இருக்கும் அடித்தட்டு மக்கள் வரை பாதிக்கும் அபாயம் உள்ளது. 

தற்போது மும்பை பங்குச்சந்தையில் எண்ணெய் நிறுவனப் பங்குகள் அனைத்தும் திடீரென விலை குறையத் தொடங்கின. இந்தநிலையில் உலக நாடுகளின் மனநிலை ஈரான் - அமெரிக்க நாடுகளின் அமைதியை எதிர்பார்த்தே இருக்கின்றது.


Advertisement