எம்மா தாயே.. உறையவைக்கிற குளிரில் ஐஸ்கட்டி பீட்சா சாப்பிடுறீங்களே எப்படி?.. வைரலாகும் கலக்கல் வீடியோ.!

எம்மா தாயே.. உறையவைக்கிற குளிரில் ஐஸ்கட்டி பீட்சா சாப்பிடுறீங்களே எப்படி?.. வைரலாகும் கலக்கல் வீடியோ.!


Instagram Video Trend about Woman Eats Iceberg Pizza Cold Season

உறையவைக்கும் கடும் குளிருள்ள நீரில் குளித்தவாறு பெண்மணி பீட்ஸா போன்ற ஐஸ்கட்டியை சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால், அங்கு கடும்பனி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, இணையவழி வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும், பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. 

இவ்வாறான காலகட்டங்களை அங்குள்ள மக்கள் இன்பத்துடன் வரவேற்க பல்வேறு செயல்களை மேற்கொள்வார்கள். உறைபனியில் உள்ளாடையுடன் தரையில் நீச்சல் அடிப்பது, பனிக்குள் விழுந்து சந்தோசமாக இருப்பது, உறைகுளிரில் இருக்கும் ஆற்றில் விழுந்து குளிப்பது என மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், பெண்மணியொருவர் உறைபனியுள்ள நீரில் விழுந்து எழுந்து, பீட்சா போல தயார் செய்து வைக்கப்பட்ட பனிக்கட்டிகளை கடித்து சாப்பிடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்த குளூரிலும் எப்படி இதனை செய்கிறார்கள் என நமது ஊர் நெட்டிசன்கள் வியந்து பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.