யூடியூபில் இனி விளம்பரங்கள் வராதா?.. ஆசையை காண்பித்து ட்விஸ்ட் வைத்த நிர்வாகம்..!Information that ad will no longer appear on YouTube

உலக அளவில் பல மில்லியன் கணக்கான பயனர்களால் தினமும் தவறாது உபயோகம் செய்யப்பட்டு வரும் விஷயங்களில் YouTube பிரதான இடத்தை பிடித்துள்ளது. இதில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் வீடியோக்களை பயனர்கள் தினமும் தங்களின் மொழிகளில் கண்டு மகிழ்கின்றனர். 

இதில் பயனர்களுக்கு தொந்தரவாக இருக்கும் விளம்பர பிரிவை வரும் மாதம் முதல் நிறுத்த இருப்பதாக யூடியூப் அறிவித்துள்ளது. யூடியூபில் வீடியோ தொடங்குவதற்கு முன்பு அல்லது இடையே விளம்பரங்கள் வரும். இதன் மூலமாக யூடியூப் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சேனல்களின் உரிமையாளர்கள் சம்பாத்தியத்தையும் பார்த்து வந்தனர். 

World news

இந்த நிலையில், ஓவர்லே ஆட்ஸ் என்ற வகையாக வீடியோவை மறைக்கும் விளம்பரங்கள் ஏப்ரல் ஆறாம் தேதியுடன் ஒளிபரப்பு செய்யப்படுவது நிறுத்தப்படும் என்றும், இதற்கு மாற்றாக வேற வகை விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.