வெடித்து சிதறியது இந்தோனேஷியாவின் மவுண்ட் மெராப்பி எரிமலை.. அச்சத்தின் உச்சத்தில் உயிரை கையைப்பிடித்து ஓடும் மக்கள்.!

வெடித்து சிதறியது இந்தோனேஷியாவின் மவுண்ட் மெராப்பி எரிமலை.. அச்சத்தின் உச்சத்தில் உயிரை கையைப்பிடித்து ஓடும் மக்கள்.!



indonesia-mount-morabi-exploded-now

 

உறங்கிக்கொண்டு இருந்த எரிமலை வெடித்து சிதறியதால் மக்கள் பாதுகாப்பான் இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தோனேஷிய நாட்டில் பல ஆபத்தான எரிமலைகள் அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்தாலும், அவை திடீரென வெடித்து சிதறுவது வழக்கமாகியுள்ளது. இதனால் பெரிய அளவிலான இயற்கை பேரிடர்கள் ஏற்படவில்லை என்றாலும், அதற்கான அறிகுறியை இவை தொடர்ந்து வழங்கி வருகின்றன. 

இந்த நிலையில், இந்தோனேஷியாவில் உள்ள யோக்யகர்த்தா பகுதியில் இருக்கும் மெராப்பி எரிமலை வெடித்து சிதறியுள்ளது. 3000 மீட்டர் (3 கி.மீ) உயரம் கொண்ட எரிமலை வெடித்து சிதறி, அதன் தூசுக்கள் வானில் வீசப்பட்டுள்ளன.

 

பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் அவசர கதியில் வெளியேற்றப்படுகின்றனர். மீட்பு குழுவினர் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். மறுஅறிவிப்பு வரும் வரையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.