இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்தா?.. அதிகாரப்பூர்வ தகவல்.!

இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்தா?.. அதிகாரப்பூர்வ தகவல்.!



Indonesia Earthquake Today no Tsunami Warning Issued

450 எரிமலைகளுடன் அதிபயங்கர நிலநடுக்கத்தை ஏற்படுத்தவுள்ள பசுபிக் நெருப்பு வளையத்தில் இந்தோனேஷியா நாடு அமைந்துள்ளது. அங்குள்ள எரிமலைகள் அவ்வப்போது சீற்றத்துடன் வெடித்து சிதறி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பானது. 

இந்தோனேஷியாவில் உள்ள பகிடிங்கி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கிஸார் தீவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கிய நிலையில், உறங்கிக்கொண்டு இருந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். தற்போது வரை 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

indonesia

இந்நிலையில், இந்தோனேஷியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் அதன் அண்டை நாடுகள் மற்றும் இலங்கை, இலங்கையை ஒட்டியுள்ள இந்தியாவின் கடலோர பகுதிகளுக்கு எவ்வித சுனாமி பாதிப்பும் தற்போது ஏற்படாது என நிலநடுக்க ஆய்வியல் மையங்கள் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளன.