நேற்று எரிமலை வெடிப்பு, இன்று பயங்கர நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் இந்தோனேஷிய மக்கள்.!

நேற்று எரிமலை வெடிப்பு, இன்று பயங்கர நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் இந்தோனேஷிய மக்கள்.!



Indonesia Affected Earthquake Several Times in Today and Yesterday Volcano Erupted

எரிமலை வெடிப்பை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் இந்தோனேஷிய மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற பேரழிவு இயற்கை சீற்றமும் அவ்பது நிகழ்ந்து வருகிறது. 

அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் நிலநடுக்கம் அதிகளவு ஏற்படும். கடந்த சில வருடமாக நிலநடுக்கத்தை அறியாத நாடுகளின் பிற மாகாணங்கள் கூட, அதன் தாக்கத்தை உணர தொடங்கிவிட்டது. 

indonesia

இந்தோனேசியாவில் உள்ள டோபெலோ பகுதியில், வடக்கு திசையில் 259 கி.மீ தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து என 2 முறை 3.3, 3.6 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளன.

தற்போது, இந்த நிலநடுக்கத்தின் சேதம் குறித்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மேலும், நேற்று இரவு நேரத்தில் இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் இருந்த சேமேரு எரிமலை வெடித்து சிதறி 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.