இந்திய மாணவர் மீது சரமாரி தாக்குதல்; இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்.!

இந்திய மாணவர் மீது சரமாரி தாக்குதல்; இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்.!


Indian Student in Chicago Beaten by Local Gangsters 

 

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாணவர் சையத் மஜாஹிர் அலி, தற்போது அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாகாணத்தில் தங்கியிருந்தவாறு மேற்படிப்பு பயின்று வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று உணவு வாங்கிக்கொண்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அச்சமயம் ஐவர் கும்பல் இவரை துரத்தி தாக்கி இருக்கிறது. 

உள்ளூரை சேர்ந்த கொள்ளை கும்பல் அவரை தாக்கி இருக்கிறது. தனக்கு உதவி செய்யுமாறு இரத்தம் சொட்டும் பதறவைக்கும் வீடியோ ஓன்றை வெளியிட்டு இருக்கிறார். 

கடந்த சில மாதங்களாகவே இந்தியர்களின் மர்ம மரணம் மற்றும் அவர்களுக்கு எதிரான தாக்குதல், கொலை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிகாகோநகரில் நடந்த தாக்குதல் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.