நொய்டாவில் திக்! திக்! வெள்ளத்தில் மூழ்கிய நூற்றுக்கணக்கான கார்கள்!!
யமுனையின் துணை நதியான ஹிண்டன் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், நொய்டாவின் ஈகோடெக் 3 பகுதியில் நேற்று வெள்ளம் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நூற்றுக்கணக்கான கார்கள் நீரில் மூழ்கியதால் நொய்டா மற்றும் காஜியாபாத் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சவாலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.