"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தினால்; கடுமையான பின்விழுகளை சந்திக்க நேரிடும்... அமெரிக்க எச்சரிக்கை..!!
வடகொரியா அடுத்த வாரம் அணு குண்டு சோதனையை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுத விவகாரத்தில், அமெரிக்காவுக்கும், வடகொரியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் வடகொரியா அதை புறக்கணித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வடகொரியா அடுத்த வாரம் அணு குண்டு சோதனை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் அடுத்த வாரம் தென்கொரியா, ஜப்பான் நாடுகளில் பயணம் மோற்கொள்ள உள்ளார். அப்போது வடகொரியா இந்த சோதனையை நடத்தலாம் என அமெரிக்கா கருதுகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்;-
"துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வருகிற 26-ஆம் தேதியில் இருந்து நான்கு நாட்கள் தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது வடகொரியா அணு குண்டு சோதனையை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஒருவேளை வடகொரியா அப்படி அணு குண்டு சோதனையை நடத்தினால் அந்த நாடு கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரித்துள்ளார்.
இதனிடையே நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணையை பரிசோதிக்க வடகொரியா தயாராகி வருவதற்கான அறிகுறிகள் தெரிவதாக தென்கொரியா ராணுவம் கூறியுள்ளது.