துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் சடலம்..! விசாரணையில் மிரண்டுபோன போலீசார்.! ஒரு அதிர்ச்சி சம்பவம்.!

துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் சடலம்..! விசாரணையில் மிரண்டுபோன போலீசார்.! ஒரு அதிர்ச்சி சம்பவம்.!


Husband killed wife and sliced her dead body

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கணவன் ஒருவர் தனது மனைவியை துண்டு துண்டாக வெட்டி மழைநீர் வெளியேறும் தொட்டிக்குள் மறைத்துவைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினர் Laure Bardina Kruger(52), அவரது கணவர் Billy Kruger (50). இவர்கள் இருவரும் சமீபத்தில் அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். எங்கு சென்றாலும் தவறாமல் தனது தந்தைக்கு போன் செய்யும் Laure Bardina சுற்றுலா சென்றதில் இருந்து அவரது தந்தைக்கு போன் செய்யவில்லை.

இதனால் சந்தேகமடைந்த Laure Bardina வின் தந்தை தனது மகளின் தொலைபேசிக்கு கால் செய்தும் அவர் பதிலளிக்கவில்லை. இதனால் பதறிப்போன அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து போலீசார் Laure Bardina மற்றும் அவரது கணவர் இருவரும் சுற்றுலா சென்ற இடத்திற்கு அவர்களை தேடி சென்றுள்ளனர்.

dead

அங்கு சென்று அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தபோது, அங்கிருந்த மழைநீர் வெளியேற்றும் தொட்டிக்குள் Laure Bardina துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக கிடைத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த Laure Bardina வின் கணவரை போலீசார் கைது செய்து அவரை விசாரித்தனர்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதத்தில் Laure Bardina வின் கணவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததோடு, உடலை மறைப்பதற்காக மனைவியின் உடலை கத்தியால் துண்டு துண்டாக வெட்டி மழைநீர் வெளியேற்றும் தொட்டிக்குள் மறைத்துவைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இந்த கொடூர கொலை சம்பவத்துக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.