உலகம்

பிரபல இசைக்குழுவை நடத்தி வந்த 28 வயது இளம்பெண்! 288 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த சோக சம்பவம்..!

Summary:

Helin polaik 288 days not taking food

துருக்கியைச் சேர்ந்தவர் ஹெலின் போலக் (28). இவர் க்ரூப் யோரம் என்ற இசைக்குழுவை நடத்தி வந்துள்ளார். அந்த இசைக்குழுவின் மூலம் அரசியல் ரீதியான பாடல்களையும், பல்வேறு புரட்சி பாடல்களை பாடி மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இதனை பார்த்த அந்நாட்டு அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு க்ரூப் யோரம் என்ற இசைக்குழுவை தடை செய்துள்ளது.

அதுமட்டுமின்றி அக்குழுவில் உள்ள சிலரையும் அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அதனை அடுத்து ஹெலின் போலக் தனது இசைக்குழுவின் மீதான தடையை நீக்க கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரியும் அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார் ஹெலின் போலக்.

ஹெலின் போலக் கிட்டத்தட்ட 288 நாட்கள் உண்ணாவிரதமிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இவரின் இறப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement