பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை: கர்ப்பிணிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம்..!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை: கர்ப்பிணிகளுக்கு ரூ.3 லட்சம் மானியம்..!


government-measures-rs-3-lakh-subsidy-for-pregnant-wome

கடந்த சில ஆண்டுகளாக ஜப்பான் நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ச்சியாக சரிந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு இறப்பு விகதம் அதிகரிப்பதால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜப்பானில்  8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகள் பதிவான நிலையில், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகள் பதிவாகியுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில், தங்களது நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக, குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தங்களது நாட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு மானியத்தை உயர்த்தி வழங்க  அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதன் படி, ஏற்கனவே ரூ.2.5 லட்சமாக வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் நிதியமைச்சர் கட்சுனோபு கட்டோ தெரிவித்துள்ளார்.