நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து! சென்னையில் பரபரப்பு!
உரிமையாளருக்கு தினமும் வீட்டிலிருந்து உணவு எடுத்துச்செல்லும் நாய்..! வைரல் வீடியோ.!
சீனாவில், தனது உரிமையாளர் ஒருவருக்கு தினமும் உணவு கொடுத்துவிட்டு, உணவு பாத்திரங்களை பத்திரமாக மீட்டும் வீட்டுக்கு எடுத்து வருகிறார் செல்ல நாய் ஓன்று. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பொதுவாக, நாய் நன்றியுள்ள ஜீவன், மனிதர்களின் நண்பன், அறிவுள்ள ஜீவன் என பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதை நம் கண் முன்னே கொண்டுவந்துள்ளது இந்த நாய். ஸியோ ஸியோ எனும் நபர் சீனாவில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தனி ஆளாக நின்று வேலை பாத்துவரும் ஸியோ தனது வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது, அவற்றை டெலிவரி செய்வது என பயங்கர பிசியாக உள்ளார். இதனால், வீட்டிற்கு சென்று உணவு அருந்திவர கூட அவருக்கு நேரமில்லை.
இதனால் நான்காவது தளத்தில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து ஸியோ வளர்ந்துவரும் நாய் ஓன்று அவருக்கு தினமும் உணவை எடுத்துக் கொண்டு வருகிறது. அதேபோல், அவர் உண்டு முடித்ததும், பாத்திரங்களைத் திரும்ப வீட்டிற்கு எடுத்துச்செல்கிறது.
Golden retriever delivers meals to master serving #Wuhan pic.twitter.com/MNogMhi22H
— CGTN (@CGTNOfficial) March 3, 2020