உலகம் லைப் ஸ்டைல்

பெண்கள் அணியும் ப்ராவுடன் நடமாடும் செம்மறி ஆடு..! காரணம் தெரிந்தால் கண் கலங்கும்!

Summary:

Goat roaming with bra reason behind

இங்கிலாந்து நாட்டில் செம்மறி ஆடு ஓன்று பெண்கள் அணியும் ப்ரா ஒன்றை அணிந்தவாறு சுற்றித்திரியும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. கேலிக்காக இப்படி செய்திருப்பார்கள் என அனைவரும் அந்த ஆட்டை காமெடியாக பார்த்தார்கள். ஆனால், ஆடு ஏன் ப்ரா அணிந்துள்ளது என்ற தகவல் வெளியானதும் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதற்கு காரணம், ரோஸ் ஏற்று அழைக்கப்படும் அந்த ஆடு சமீபத்தில் மூன்று குட்டிகளை போட்டுள்ளது. ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளை போட்டதால் அந்த ஆட்டின் கர்ப்பப்பை கீழே இறங்கியுள்ளது. இப்படியே விட்டால் நாளுக்கு நாள் அந்த ஆட்டின் கர்ப்பப்பை கீழே இறங்கி தரையில் உரச ஆரம்பித்துவிடும்.

அப்படி தரையில் உரசினாள் நாளடைவில் அந்த ஆடு இறந்துவிடும். இதனை தடுக்கவும், ஆட்டின் கர்ப்பப்பை கீழே உரசாமால் இருக்கவுமே அந்த ஆட்டுக்கு ப்ரா போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement