டிக் டாக் விபரீதம்! வாயில் இசைக்கருவியை நுழைத்து துடுதுடித்த மாணவி! வைரல் வீடியோ!



girl-struggled-for-tik-tok

கனடாவில் மேல்நிலைப்பள்ளி படித்து வரும் மாணவி ஒருவர்  டிக்டாக் வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவரது தம்பிக்காக வேடிக்கையாக வீடியோ ஒன்றை செய்ய நினைத்து, ஹார்மோனிக்காவை முழுவதுமாக வாயில் அடைத்து வைத்து வாசித்து காட்டும் வகையிலான டிக்-டாக் வீடியோ எடுக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஹார்மோனிக்கா முழுவதும் அவரின் வாயில் சிக்கி கொண்டது, அதனை வெளியே எடுக்கமுடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனையடுத்து வழியால் துடித்த அந்த இளம்பெண்ணை அவரது தாயார், பல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

@mollieobrien

going to cheo to get my harmonica removed... #foryou #fyp #foryoupage #dissapointment #failure #mymomdoesntloveme #idiot

♬ I just did a bad thing bill wurtz - cameron.tr
மருத்துவமனையில், கடும் போராட்டங்களுக்கு பிறகு  ஹார்மோனிகாவை பெண்ணின் வாயில் இருந்து மருத்துவர்கள் அகற்றியுள்ளார். இதனால், அந்த பெண் அவரது டிக் டாக்கில் வீடியோ போட்டு யாரும் என்னை மாதிரி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பெண்ணின் வாயில் சிக்கி கொண்டு தவித்த இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.