
Girl gets lead stuck in her EYE after a classmate threw a pencil
பொதுவாக குழந்தைகள் விளையாடும்போது பொருட்களை தூக்கி எறிவது, ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை தள்ளிவிடுவது போன்றவை இயல்பான ஒன்றுதான். இது பல நேரங்களில் விளையாட்டாக இருந்தாலும் அதுவே சில நேரங்களில் பெரும் ஆபத்தாகவும் முடிந்துவிடுகிறது.
லண்டன், மான்ஸ்டர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டு சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது ஒரு சிறுமி தன் கையில் வைத்திருந்த பென்சிலை தனது தோழியை நோக்கி வீசியுள்ளார். இதில் பென்சிலின் முனை அந்த சிறுமியின் கண்ணில் ஆழமாக குதியுள்ளது.
இதில் வலியால் துடித்த சிறுமியை பள்ளி நிர்வாகம் மருத்துவமனையில் சேர்த்துள்ளது. சிறுமியின் கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பென்சிலின் முனை உடைந்து அதில் உள்ள காரியம் என்ற பொருள் கண்ணில் அடைத்துக்கொண்டிருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், அந்த பென்சிலின் முனை கண்ணின் உயிர் கோளமான ரெட்டினா பகுதிக்கு சற்று தள்ளி குதியுள்ளது. அதுவே, சில மில்லி மீட்டர் தள்ளி ரெடினா பகுதியில் குத்திருத்தல் அந்த சிறுமியின் கண்பார்வை நிச்சயம் பறிபோயிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்னனர்.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து அந்த சிறுமி நலமுடன் இருப்பதாகவும், கண் பார்வையில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement