ஆட்டை அறுப்பதுபோல, ஆணுறுப்பை கறகறவென தனக்குத்தானே துண்டித்த நபர்.. இப்படியும் செய்வார்களா?.. பதறவைக்கும் பயங்கரம்.!

ஆட்டை அறுப்பதுபோல, ஆணுறுப்பை கறகறவென தனக்குத்தானே துண்டித்த நபர்.. இப்படியும் செய்வார்களா?.. பதறவைக்கும் பயங்கரம்.!


ghana-country-man-cut-penis-when-dream-comes-cut-sheep

கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து தன் ஆண் உறுப்பை ஒருவர் வெட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. 

ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டின் மத்திய பகுதியில் இருக்கும் அஸ்லின் கொஸ் நகரை சார்ந்தவர் கொஃபி அட்டா (வயது 47). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று, அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது கனவில் ஆட்டினை வெட்டுவதாக நினைத்து தனது பிறப்புறுப்பை தானே வெட்டிக் கொண்டார். 

இந்த விஷயம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், கொஃபியின் மனைவி பீட்டா கணவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நான் வெளியே சென்று இருந்த சமயத்தில் இப்படி நடந்துள்ளது. 

பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு தகவல் தெரிவித்தார். வீட்டுக்கு வந்து பார்த்ததும் எனது கணவரின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி காணப்பட்டார். அவரின் ரத்தப்போக்கை நிறுத்த டயப்பர் அணிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதி செய்தேன். இன்று உயிர் பிழைத்துக்கொண்டார். கடவுளுக்கு நன்றி என்று தெரிவித்தார். 

இதுகுறித்து விசாரிக்கையில், கொஃபி சம்பவத்தன்று சேரில் உட்கார்ந்து உறங்கிக்கொண்டு இருந்தபோது, ஆட்டினை வெட்டுவது போன்ற கனவு வந்த வந்துள்ளது. உறக்கத்திலேயே தனது ஆணுறுப்பை ஆடாக நினைத்து கத்தியால் அதனை வெட்டியுள்ளார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கொஃபியின் ஆணுறுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வார சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்புவார்.